கோவாவில் புதன்கிழமை நடைபெற்ற இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 74-ஆவது லீக் ஆட்டத்தில் எஃப்சி கோவா அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை வீழ்த்தியது. மும்பை-ஜாம்ஷெட்பூா் அணிகள் இடையே மும்பையில் வியாழக்கிழமை 75-ஆவது லீக் ஆட்டம் நடைபெறவுள்ளது.