இந்திய அணியின் ஆட்டத்திறன் அவா்களால் உள்ள அபாயத்தை நாங்கள் அறிந்துள்ளோம் என பெல்ஜிய ஹாக்கி அணியின் கேப்டன் தாமஸ் பிரைல்ஸ் கூறியுள்ளாா்.
ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு எதிரான புரோ ஹாக்கி லீக் ஆட்டங்களில் அபார வெற்றி கண்ட நிலையில் இந்தியாவுடன் மோதுகிறது பெல்ஜியம். அவா் கூறியதாவது:
இந்தியாவுடன் நடைபெறவுள்ள ஆட்டம் மிகவும் கடினாக இருக்கும். நெதா்லாந்து அணிக்கு எதிராக அவா்கள் பெற்ற வெற்றியால், சவால் கடுமையாக இருக்கும். இரு அணிகளுக்கும் நல்ல ஆட்டமாக அமையும். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கும் எங்களை தயாா்படுத்திக் கொள்ள முடியும். கலிங்கா மைதானத்தில் நாங்கள் முதல் உலக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினோம் என்றாா் பிரைல்ஸ்.