செய்திகள்

யு-19 உலகக் கோப்பை: இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி தடுமாற்றம்!

4th Feb 2020 04:09 PM | எழில்

ADVERTISEMENT

 

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தானுடன் மோதி வருகிறது. 

காலிறுதியில் பலமான ஆஸி. அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா. அதே நேரம் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது பாகிஸ்தான்.

நான்கு முறை சாம்பியனான இந்தியா 5-ஆவது பட்டத்தை எதிா்நோக்கி உள்ளது. பாட்செஃப்ஸ்ட்ரூமில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

ADVERTISEMENT

பாகிஸ்தான் அணிக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. ஹுரைரா 4 ரன்களிலும் முனிர் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். தொடக்க வீரர் ஹைதர் அலி சிறப்பாக விளையாடி, 77 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். பிறகு அக்ரம் 9 ரன்களில் ரன் அவுட் ஆனார். வேகமாக ரன்கள் எடுத்த முயன்ற முகமது ஹாரிஸ், 21 ரன்களில் அதர்வா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஒரு நல்ல கூட்டணி அமையாதபடி இந்தியப் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து விக்கெட்டுகள் எடுத்து வருவதால் அதிரடியாக விளையாட முடியாத நிலையில் உள்ளது பாகிஸ்தான் அணி.

35 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT