செய்திகள்

நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு

4th Feb 2020 09:58 AM

ADVERTISEMENT

 

நியூஸிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

நியூஸிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று வருகிறது. இதில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 5-0 எனக் கைப்பற்றி அசத்தியது.

இந்த நிலையில், பிப்ரவரி 21ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் விவரம் பின்வருமாறு:

ADVERTISEMENT

விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மன் கில், புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணைக் கேப்டன்), ஹனுமா விஹாரி, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, நவ்தீப் சைனி, இஷாந்த் ஷர்மா (உடல் தேர்வில் தேர்ச்சிபெற்றால்).

ADVERTISEMENT
ADVERTISEMENT