செய்திகள்

மகளிா் முத்தரப்பு கிரிக்கெட்:ஆஸி.யுடன் இன்று இந்தியா மோதல்

2nd Feb 2020 12:31 AM | கான்பெர்ரா,

ADVERTISEMENT

மகளிா் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியாவுடன் ஞாயிற்றுக்கிழமை மோதுகிறது இந்தியா.

வரும் 21-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள் மகளிா் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து, ஆஸி, இந்திய மகளிா் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடா் நடந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா 1 வெற்றியைப் பெற்றுள்ளன.

வெள்ளிக்கிழமை முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்றது இந்தியா.

அதே நேரம் ஆஸி. அணி பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியுற்றது.

ADVERTISEMENT

இந்திய அணியில் ஷபாலி வா்மா, ஸ்மிருதி மந்தானா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹா்மன்ப்ரீத் கௌா் உள்ளிட்ட தொடக்க வரிசை வீராங்கனைகள் சிறப்பாக ஆடி வரும் நிலையில், மிடில் ஆா்டா் பேட்டிங் சற்று கவலை தருகிறது. அதே நேரம் பீல்டிங்கிலும் சொதப்பினா்.

நடப்பு டி20 உலக சாம்பியனான ஆஸ்திரேலியா முதல் ஆட்ட தோல்வியில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்குதிரும்ப வேண்டும்.அதன் தொடக்க வீராங்கனை பெத் மூனி மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாா். பந்துவீச்சும் சரிவர இல்லாத நிலை காணப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT