செய்திகள்

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்

1st Feb 2020 02:34 PM | எழில்

ADVERTISEMENT

 

முழு உடற்தகுதி அடையாத காரணத்தால் நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகியுள்ளார்.

முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்குக் கடந்த வருடம் அக்டோபர் மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. 25 வயது பாண்டியா 11 டெஸ்டுகள், 54 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆசியக் கோப்பைப் போட்டியின் போது ஹார்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பல ஆட்டங்களில் விளையாடவில்லை. கடந்த வருடம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பாண்டியா, முதுகு வலி காரணமாக இந்திய அணி அடுத்து விளையாடிய எந்தவொரு தொடரிலும் பங்கேற்கவில்லை.

சிகிச்சைக்குப் பிறகு பயிற்சியைத் தொடங்கிய ஹாா்திக் பாண்டியா பந்துவீச்சுக்காக நடத்தப்பட்ட சோதனையில் தோ்ச்சி பெறவில்லை. இதனால் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் இடம்பெறவில்லை. இந்நிலையில் டெஸ்ட் தொடரிலும் பாண்டியாவால் கலந்துகொள்ள முடியாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார். முழு உடற்தகுதியை இன்னும் அடையாததால் பரிசோதனைக்காக லண்டனுக்கு பாண்டியா சென்றுள்ளார். இதன்பிறகு பெங்களூரில் உள்ள என்.சி.ஏ.வில் பயிற்சிகளை மேற்கொள்வார் என்று ஜெய் ஷா கூறியுள்ளார். 

ADVERTISEMENT

Tags : Hardik Pandya
ADVERTISEMENT
ADVERTISEMENT