செய்திகள்

நிதானமாகப் பந்துவீசிய இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி!

1st Feb 2020 03:34 PM | எழில்

ADVERTISEMENT

 

4-வது டி20 ஆட்டத்தில் இந்திய அணி நிதானமாகப் பந்துவீசியதாக ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 

நியூஸிலாந்துக்கு எதிரான 4-ஆவது டி-20 ஆட்டமும் முந்தைய ஆட்டம் போன்று டை ஆனதால் சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில், இந்திய அணி வென்றதன் மூலம், இந்தத் தொடரின் முதல் 4 ஆட்டங்களையும் கைப்பற்றி வெற்றி நடையைத் தொடர்கிறது. 4 ஓவர்கள் வீசி 33 ரன்களைக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஷர்துல் தாக்குர் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

இந்நிலையில் 4-வது டி20 ஆட்டத்தின்போது இந்திய அணி நிதானமாகப் பந்துவீசியதாக ஐசிசி குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்குள் 2 ஓவர்கள் குறைவாக வீசியதால், இந்திய அணிக்கு ஆட்ட ஊதியத்திலிருந்து 40% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

5-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பே ஓவல் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

Tags : fourth T20I
ADVERTISEMENT
ADVERTISEMENT