செய்திகள்

‘மன்கட்’ ரன் அவுட் வேண்டாம்: ஜேம்ஸ் ஆண்டர்சன் கோரிக்கை

1st Feb 2020 05:38 PM | எழில்

ADVERTISEMENT

 

யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது பாகிஸ்தான் அணி. இதையடுத்து அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அஹமது, பாகிஸ்தான் தொடக்க வீரர் முகமது ஹுரைராவை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். பந்துவீசும் முன்பு கிரீஸை விட்டு முகமது வெளியே சென்றதால் நூர் அஹமது அவரை மன்கட் முறையில் அவுட் செய்தார். 

இதையடுத்து மன்கட் முறையில் ரன் அவுட் செய்வது சரியா என்கிற சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், மன்கட் ரன் அவுட் முறையை விதிமுறைகளில் இருந்து நீக்கவேண்டும் என்று ஐசிசிக்கு ட்விட்டர் வழியாகக் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்குப் பலரும் விமரிசனம் செய்துள்ளார்கள்.

Tags : Mankad
ADVERTISEMENT
ADVERTISEMENT