செய்திகள்

தாய்லாந்து ஓபன்: நஜோமியிடமிருந்து தொடங்குகிறார் சாய்னா

31st Dec 2020 04:34 AM

ADVERTISEMENT

 

புது தில்லி,: தாய்லாந்தில் நடைபெறவுள்ள இரு சர்வதேச பாட்மிண்டன் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் முதல் சுற்றில் எதிர்கொள்ளும் போட்டியாளர்கள் அட்டவணை வெளியாகியுள்ளது. 
தாய்லாந்தில் ஜனவரி 12 முதல் 17 வரையும், 19 முதல் 24 வரையும் இரு போட்டிகள் நடைபெறவுள்ளன. 
அவற்றில் தனது முதல் சுற்றுகளில் பி.வி.சிந்து, முறையே டென்மார்க்கின் மியா பெலிஷ்ஃபெல்டெட், தாய்லாந்தின் புசனான் ஆங்பம்ரங்பான் ஆகியோரை சந்திக்கிறார். 
சாய்னா நெவால் முறையே, ஜப்பானின் நஜோமி ஒகுஹரா, தாய்லாந்தின் ரட்சனோக் இந்தனான் ஆகியோரை எதிர்கொள்கிறார். 
ஆடவர் பிரிவில் ஸ்ரீகாந்த், சக இந்தியரான செளரவ் வர்மா, தாய்லாந்தின் சித்திகோம் தம்மாசின் ஆகியோருடன் முதல் சுற்றுகளில் விளையாடுகிறார்.  லக்ஷயா சென், டென்மார்க்கின் ராஸ்மஸ் கெம்கே, சீன தைபேவின் செள டியென் சென் ஆகியோரை எதிர்கொள்கிறார். 
சாய் பிரணீத் முதல் சுற்றுகளில் தாய்லாந்தின் கன்டாபோன் வாங்சரோன், மலேசியாவின் டேரன் லியு ஆகியோரை சந்திக்கிறார். 
பி.காஷ்யப், ஜப்பானின் கென்டா நிஷிமோடோவையும், டென்மார்கின் ராஸ்மஸ் கெம்கேவையும் முதல் சுற்றுகளில் சந்திக்கிறார். 
ஹெச்.எஸ். பிரணாய், மலேசியாவின் லீ ஜி ஜியாவ், இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி ஆகியோருடன் மோதுகிறார். 
சமீர் வர்மா, இந்தோனேசியாவின் ஷேசர் ஹிரென் ருஸ்டாவிடோவையும், மலேசியாவின் லீ ஜி ஜியாவையும் சந்திக்கிறார்.  செளரவ் வர்மா, முதல் போட்டியில் சக இந்தியரான ஸ்ரீகாந்தையும், அடுத்த போட்டியில் இந்தோனேசியாவின் அந்தோனி சினிசுகா கிங்டிங்கையும் முதல் சுற்றில் எதிர்கொள்கிறார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT