செய்திகள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிரான அஸ்வினின் புதிய சாதனை

31st Dec 2020 12:06 PM

ADVERTISEMENT

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களை அதிக முறை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையை இந்தியாவின் ஆர். அஸ்வின் பெற்றுள்ளார். 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

இந்தத் தொடரில் இதுவரை 10 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின். இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை அதிக அளவில் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார். 

மெல்போர்ன் டெஸ்டில் கடைசியாக ஹேசில்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 192 இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு இலங்கையின் முத்தையா முரளிதரன், 191 இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. அதனை அஸ்வின் தாண்டிச் சென்றுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை அதிகமுறை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள்

அஸ்வின் - 192 விக்கெட்டுகள்
முரளிதரன் - 191 விக்கெட்டுகள்
ஆண்டர்சன் - 186 விக்கெட்டுகள்
மெக்ராத் - 172 விக்கெட்டுகள்
வார்னே - 172 விக்கெட்டுகள்

ADVERTISEMENT
ADVERTISEMENT