செய்திகள்

ஜோ பர்ன்ஸ் நீக்கம்: ஆஸி. அணிக்கு மீண்டும் திரும்பிய டேவிட் வார்னர்

30th Dec 2020 01:28 PM

ADVERTISEMENT

 


இந்தியாவுக்கு எதிராக விளையாடும் டெஸ்ட் தொடருக்கான ஆஸி. அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. டேவிட் வார்னர் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். ஜோ பர்ன்ஸ் நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 

3-வது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 7-ல் மற்றும் 4-வது டெஸ்ட் பிரிஸ்பேனில் ஜனவரி 15-ல் தொடங்குகின்றன.

இந்நிலையில் கடைசி இரு டெஸ்ட் ஆட்டங்களுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இதுவரை விளையாடாத டேவிட் வார்னர், வில் புகோவ்ஸ்கி, அபாட் ஆகிய மூவரும் அணியில் மீண்டும் இடம்பெற்றுள்ளார்கள். முதல் இரு டெஸ்டுகளில் மோசமாக விளையாடிய ஜோ பர்ன்ஸ் நீக்கப்பட்டுள்ளார். 

Tags : warner Burns
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT