செய்திகள்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி: சதம் விளாசினார் ரஹானே

27th Dec 2020 12:42 PM

ADVERTISEMENT

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் தொடரின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் சதம் அடித்து விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. 2-வது டெஸ்ட் மெல்போர்னில் சனிக்கிழமை தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் இன்னிங்ஸில் இந்தியா விளையாடி வருகிறது. இதில் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி வரும் இந்திய அணியின் கேப்டன் ரஹானே அதிரடியாக சதம் விளாசினார். 195 பந்துகளில் 11 பவுண்டரிகளை அடித்த அவர் தனது 12ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

ADVERTISEMENT

மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா ஆஸ்திரேலிய அணியை விட 80க்கும் மேற்பட்ட ரன்கள் முன்னிலையில் விளையாடி வருகிறது.
 

Tags : Ind vs Aus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT