செய்திகள்

டி20 தரவரிசை: 3-ஆம் இடத்தில் ராகுல்

10th Dec 2020 04:20 AM

ADVERTISEMENT

 

துபை: ஐசிசி-யின் டி20 தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 3-ஆவது இடத்துக்கு முன்னேறினார். 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் நிறைவடைந்த நிலையில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி, ஆஸ்திரேலியாவின் 
ஆரோன் ஃபிஞ்சை பின்னுக்குத் தள்ளி ராகுல் 816 புள்ளிகளுடன் அந்த இடத்துக்கு வந்துள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி ஓரிடம் முன்னேறி 697 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தை எட்டியுள்ளார். 
முதலிடத்தில் இங்கிலாந்தின் டேவிட் மலானும் (915 புள்ளிகள்), 2-ஆம் இடத்தில் பாகிஸ்தானின் பாபர் ஆஸமும் (871) உள்ளனர். பெளலர்கள் பிரிவில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஸாம்பா 2 இடங்கள் முன்னேறி 5-ஆம் இடத்துக்கு வந்துள்ளார். இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டான் 10-ஆவது இடத்துக்கு வர, ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் (736), முஜீப்-உர்-ரஹ்மான் (730) ஆகியோரும், இங்கிலாந்தின் ஆதில் ரஷீதும் (700) முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். 
பெளலர்கள் பிரிவில் முதல் 10 இடங்களுக்குள்ளாக இந்தியர்கள் எவரும் இல்லை. 
ஆல்-ரவுண்டர்கள் பிரிவில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி (294), வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் (268), ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் (225) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT