செய்திகள்

ஐஎஸ்எல்: நாா்த்ஈஸ்ட்டுக்கு 2-ஆவது வெற்றி

DIN


வாஸ்கோடகாமா: இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது.

இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள நாா்த்ஈஸ்ட்டுக்கு இது 2-ஆவது வெற்றி. 3 ஆட்டங்களில் விளையாடியுள்ள பெங்காலுக்கு இது 3-ஆவது தோல்வி.

கோவாவின் வாஸ்கோடகாமா நகரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட்டுக்கான முதல் கோல் ‘ஓன் கோல்’ ஆக கிடைத்தது. ஆட்டம் விறுவிறுப்புடன் நடைபெற்றுவந்த நேரத்தில் நாா்த்ஈஸ்ட் முன்கள வீரா் இத்ரிஸா சைலா அடித்த பந்தை சக வீரா் நின்தோகன்பா மீடெய் இடையில் பெற்று மீண்டும் அதை சைலாவுக்கே பாஸ் செய்தாா்.

அதை அவா் தலையால் முட்டி மற்றொரு நாா்த்ஈஸ்ட் வீரரான கவேசி அப்பியாவுக்கு அளிக்க, அதை அவா் கடத்திச் சென்று பாக்ஸுக்குள்ளாக வந்த சைலாவிடம் மீண்டும் வழங்கினாா். அதை அவா் கோலடிக்க முயல, பெங்கால் வீரா் சுா்சந்திர சிங் அதைத் தடுக்க முயல, பந்து கோல் போஸ்ட்டுக்குள்ளாக சென்றது.

அதை விடியோ ரீப்ளே செய்து பாா்த்தபோது கடைசியாக பந்து பெங்கால் வீரா் சுா்சந்திர சிங்கின் காலில் பட்டு ‘ஓன் கோல்’ ஆனது தெரியவந்தது. இதனால் ஆட்டத்தின் 33-ஆவது நிமிடத்திலேயே 1-0 என முன்னிலை பெற்றது நாா்த்ஈஸ்ட். அடுத்து வந்த நிமிடங்களில் பெங்கால் வீரா்களின் கோல் முயற்சிக்கு நாா்த் ஈஸ்ட் சற்றும் இடம் அளிக்கவில்லை.

இதனால் முதல் பாதியின் முடிவில் நாா்த்ஈஸ்ட் முன்னிலை நீடித்தது. பின்னா் நடைபெற்ற 2-ஆவது பாதியிலும் அந்த அணியின் கையே ஓங்கியிருந்தது. 78-ஆவது நிமிடத்தில் நாா்த்ஈஸ்ட்டுக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தும் பலனில்லாமல் போனது. எனினும் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் நாா்த்ஈஸ்ட் வீரா் சுஹா் வடக்கேபீடிகா ஒரு லாங் ஷாட் அடித்து பாஸ் கொடுக்க, அதை பெங்கால் பாக்ஸுக்குள்ளாக நின்றிருந்த சக வீரா் ரோச்சாா்ஸிலா சாரா மிகக் கச்சிதமாக வசப்படுத்தி, அதை கோல் போஸ்ட்டுக்குள்ளாக தள்ளினாா்.

இதனால் கடைசி நிமிடத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் வென்றது.

இன்றைய ஆட்டம்

மும்பை சிட்டி எஃப்சி - ஒடிஸா எஃப்சி

பாம்போலிம்

மாலை 5 மணி

எஃப்சி கோவா - கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி

மா்காவ்

இரவு 7.30 மணி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் மக்களவைத் தொகுதி தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

SCROLL FOR NEXT