செய்திகள்

ஒரே நாளில் 15 விக்கெட்டுகள்: இன்னிங்ஸ் வெற்றியை நெருங்கும் நியூசிலாந்து அணி

DIN

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஃபாலோ ஆன் ஆன மேற்கிந்தியத் தீவுகள் அணி, தோல்வி பெறும் நிலையில் உள்ளது.

ஹாமில்டனில் நடைபெறும் முதல் டெஸ்டில், முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 145 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 519 ரன்கள் எடுத்து டிக்ளோ் செய்தது. இரட்டைச் சதம் அடித்த வில்லியம்சன் 34 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 251 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 26 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சோ்த்திருந்தது. கிரெய்க் பிரத்வெயிட் 20, ஜான் கேம்ப்பெல் 22 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

இன்று நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் அற்புதமாகப் பந்துவீசி பேட்ஸ்மேன்களைத் திணறடித்தார்கள். இதனால் முதல் இன்னிங்ஸில் 64 ஓவர்களில் 138 ரன்களுக்கு மே.இ. தீவுகள் அணியைச் சுருட்டினார்கள். செளதி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். காயம் காரணமாக டெளரிச் பேட்டிங் செய்யவில்லை.

முதல் இன்னிங்ஸில் ஃபாலோ ஆன் ஆன மே.இ. தீவுகள் அணி, 3-ம் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. ஒருகட்டத்தில் முதல் 6 விக்கெட்டுகளையும் 89 ரன்களுக்கு இழந்தது. எனினும் பிறகு ஜோடி சேர்ந்த பிளாக்வுட், அல்ஸாரி ஜோசப் ஆகிய இருவரும் பொறுப்புடன் விளையாடி மேலும் சரிவு ஏற்படாமல் பார்த்துக்கொண்டார்கள். பிளாக்வுட் 98 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 80 ரன்களும் ஜோசப் 73 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 59 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளார்கள்.

3-ம் நாள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது 2-வது இன்னிங்ஸில், 42 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்துள்ளது. 

எனினும் 4 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 185 ரன்கள் பின்தங்கியிருப்பதால் முதல் டெஸ்டில் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT