செய்திகள்

டி20 தொடர்: ஆஸி. அணியில் நாதன் லயன் சேர்ப்பு

5th Dec 2020 10:52 AM

ADVERTISEMENT

 

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் தோற்றுள்ள ஆஸ்திரேலிய அணி, மீதமுள்ள இரு டி20 ஆட்டங்களுக்குச் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனைத் தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கான்பெராவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா நிா்ணயிக்கப்பட்ட ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களே அடித்து வீழ்ந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் மீதமுள்ள இரு டி20 ஆட்டங்களையும் வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ள ஆஸ்திரேலிய அணி, சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனைத் தேர்வு செய்துள்ளது. மேலும் நாளை முதல் சிட்னியில் நடைபெறவுள்ள இந்திய அணிக்கு எதிரான மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஆல்ரவுண்டர் க்ரீனை அணியிலிருந்து விலக்கியுள்ளது. ஆஷ்டன் அகருக்குக் காயம் ஏற்பட்டுள்ளதால் லயன் ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.  

ஆஸி. டெஸ்ட் அணியின் முக்கிய வீரரான நாதன் லயன் இதுவரை 96 டெஸ்டுகளிலும் 29 ஒருநாள் மற்றும் 2 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார். கடைசியாக 2018 அக்டோபரில் டி20 ஆட்டத்தில் விளையாடினார்.

Tags : Lyon Green
ADVERTISEMENT
ADVERTISEMENT