செய்திகள்

12 இன்னிங்ஸில் 7 அரை சதங்கள்: டி20 கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வரும் கே.எல். ராகுல்!

எழில்

டி20 கிரிக்கெட்டில் சமீபகாலமாக அற்புதமாக விளையாடி, இந்திய அணியின் பெரிய பலமாக உள்ளார் கே.எல். ராகுல். கடந்த 12 டி20 இன்னிங்ஸில் 7 அரை சதங்கள் எடுத்துள்ளார். 

நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்துள்ளார். 

2018-ல் ஆரம்பித்து கடந்த மூன்று வருடங்களாக ஐபிஎல்-லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ராகுல். 2018-ல் 659 ரன்களும் 2019-ல் 593 ரன்களும் 2020-ல் 670 ரன்களும் எடுத்து அசத்தினார். பஞ்சாப் அணி பிளேஆஃப்புக்குத் தகுதி பெற்றிருந்தால் இன்னும் அதிகமான ஆட்டங்களில் விளையாடி மேலும் ரன்கள் குவித்திருப்பார். 

சர்வதேச கிரிக்கெட்டிலும் இதேபோல அட்டகாசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். 

கடைசி 12 டி20 இன்னிங்ஸில் 7 அரை சதங்கள் எடுத்துள்ளார் ராகுல். இந்த வருடம் விளையாடிய 9 ஆட்டங்களில் ஒருமுறை மட்டுமே குறைவாக 27 ரன்கள் எடுத்துள்ளார். மற்ற எல்லா ஆட்டங்களிலும் கணிசமான ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு உதவியுள்ளார்.

இந்த வருடத் தொடக்கத்தில் நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 தொடரில் நியூசிலாந்தை 5-0 என வீழ்த்தியது இந்தியா. அதில் அதிக ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார் ராகுல். தற்போது ஆஸ்திரேலியாவிலும் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 

இந்திய அணிக்காக இதுவரை 36 டெஸ்டுகள், 35 ஒருநாள், 42 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் கே.எல். ராகுல். 

பேட்டிங்கில் மட்டுமல்லாமல் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு இந்திய அணி கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளரைத் தேர்வு செய்ய உதவி செய்கிறார். அணிக்கு அதிகமாகப் பங்களிப்பதாலும் தொடர்ந்து ரன்கள் குவித்து வருவதாலும் டெஸ்ட் அணியிலும் மீண்டும் இடம்பிடித்துள்ளார். தொடர்ந்து சாதிக்கட்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT