செய்திகள்

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் மேலும் ஒருவருக்கு கரோனா பாதிப்பு!

DIN

நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணியில் மேலும் ஒரு நபருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

நியூசிலாந்தில் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் டி20, டெஸ்ட் தொடர்களில் பங்கேற்கின்றன. நியூசிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 2-0 என நியூசிலாந்து வென்றுள்ளது. இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் வரும் டிசம்பா் 3-ம் தேதி ஹாமில்டனிலும், 2-வது ஆட்டம் டிசம்பா் 11-ம் தேதி வெலிங்டனிலும் நடைபெறுகிறது.

இதற்கு அடுத்ததாக பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் மூன்று டி20, இரு டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடவுள்ளது. டிசம்பர் 18-ல் டி20 தொடரும் டிசம்பர் 26-ல் டெஸ்ட் தொடரும் தொடங்கவுள்ளன.

லாகூரிலிருந்து நியூசிலாந்துக்குப் புறப்படுவதற்கு முன்பு பாகிஸ்தான் அணியினர் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் யாருக்கும் கரோனா இல்லை என உறுதியானது. கரோனா அறிகுறிகள் தென்பட்ட ஃபகார் ஸமான், அணியிலிருந்து விலகினார். எனினும் நியூசிலாந்துக்கு வந்திறங்கிய பாகிஸ்தான் அணியினருக்கு முதலில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் ஆறு பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த ஆறு பேரும் தனிமைப்படுத்தப்பட்டார்கள். இதன்பிறகு மற்றொரு நபரும் கரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

நவம்பர் 24 அன்று நியூசிலாந்துக்கு வந்த பாகிஸ்தான் வீரர்கள், 14 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதால் பாகிஸ்தான் வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு விதிமுறைகளை அலட்சியப்படுத்தும் வீரர், பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 46 பேருக்கும் மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இத்தகவலை நியூசிலாந்தின் சுகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் இருவருடைய பரிசோதனைகளின் முடிவுகள் குறித்து விசாரணை செய்து வருவதாகவும் கூறியுள்ளது. இதனால் நியூசிலாந்து வந்துள்ள பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த 8 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

முதல்கட்ட மக்களவைத் தேர்தல்: 102 தொகுதிகளின் ஒட்டுமொத்த நிலவரம்!

SCROLL FOR NEXT