செய்திகள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்: 3-0 என முழுமையாக வென்ற இங்கிலாந்து அணி!

DIN

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்று அசத்தியுள்ளது இங்கிலாந்து அணி.

கேப் டவுனில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. முதல் 3 விக்கெட்டுகளை 9.3 ஓவர்களில் 64 ரன்களுக்கு இழந்தது. அடுத்து ஜோடி சேர்ந்த டு பிளெசிஸ்ஸும் வான் டர் டுஸ்ஸெனும் சிறப்பாக விளையாடி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். டு பிளெசிஸ் 37 பந்துகளில் 52 ரன்களும் வான் டர் டுஸ்ஸென் 32 பந்துகளில் 74 ரன்களும் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது.

இந்தக் கடினமான இலக்கைச் சிறப்பாக எதிர்கொண்டது இங்கிலாந்து அணி. 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பட்லரும் மலானும் 17.4 ஓவர்களில் இலக்கை விரட்டி ஆச்சர்யப்படுத்தினார்கள். பட்லர், 46 பந்துகளில் 67 ரன்களும் மலான் 47 பந்துகளில் 99 ரன்களும் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி 17.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்து டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன் என இரு விருதுகளையும் மலான் வென்றார். 

இதற்கு அடுத்ததாக இரு அணிகளும் ஒருநாள் தொடரில் மோதவுள்ளன. முதல் ஒருநாள் கேப் டவுனில் டிசம்பர் 4 அன்று தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்அப் பிரசாரத்தைத் தொடங்கினார் கேஜரிவாலின் மனைவி!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

SCROLL FOR NEXT