செய்திகள்

12,000 ஒருநாள் ரன்கள்: சச்சின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி

2nd Dec 2020 10:56 AM

ADVERTISEMENT

 

ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ரன்கள் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

இந்நிலையில் 3-வது ஒருநாள் ஆட்டம் கேன்பராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ஷுப்மன் கில், நடராஜன், ஷர்துல் தாக்குர், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ADVERTISEMENT

இன்று 23 ரன்கள் எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட்டில் 12,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் இந்திய கேப்டன் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர் 300 ஒருநாள் இன்னிங்ஸில் (309-வது ஒருநாள் ஆட்டம்) 12,000 ரன்களை விரைவாக எடுத்து சாதனை செய்திருந்தார். அதை கோலி இன்று முறியடித்துள்ளார். 12,000 ரன்களைக் கடக்க கோலிக்கு 242 இன்னிங்ஸ் (251-வது ஒருநாள் ஆட்டம்) மட்டுமே தேவைப்பட்டுள்ளது.

ஒருநாள் கிரிக்கெட்டில் விரைவாக 12,000 ரன்களைக் கடந்த வீரர்கள் (இன்னிங்ஸ்)

242 விராட் கோலி
300 சச்சின் டெண்டுல்கர் 
314 ரிக்கி பாண்டிங்
336 குமார் சங்கக்காரா
379 சனத் ஜெயசூர்யா
399 மஹேலா ஜெயவர்தனே

விரைவாக ஒருநாள் ரன்களைக் கடந்த வீரர் 

8000 ஒருநாள் ரன்கள் - கோலி
9000 ஒருநாள் ரன்கள் - கோலி 
10000 ஒருநாள் ரன்கள் - கோலி 
11000 ஒருநாள் ரன்கள் - கோலி 
12000 ஒருநாள் ரன்கள் - கோலி 

Tags : Kohli Tendulkar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT