செய்திகள்

துப்பாக்கியால் சுட்டது போல இருந்தது: டேவிட் வார்னரின் காயம் பற்றி ஆஸி. பயிற்சியாளர்

1st Dec 2020 01:08 PM

ADVERTISEMENT

 

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 4 முதல் டி20 தொடரும் டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடரும் தொடங்குகின்றன. முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

2-ஆவது ஒருநாள் ஆட்டத்தின்போது ஞாயிற்றுக்கிழமை இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்ட வாா்னா் தற்போது அதிலிருந்து மீண்டு வருகிறார். இதனால் 3-வது ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலிருந்து அவர் விலகியுள்ளார்.

இந்நிலையில் வார்னரின் காயம் பற்றி ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர் கூறியதாவது:

ADVERTISEMENT

வார்னருக்கு ஏற்பட்டது மிகவும் வலி மிகுந்த காயம் எனச் சொல்கிறார்கள். துப்பாக்கியால் வார்னரை சுட்டது போல இருந்தது. ஓய்வறையில் மிகுந்த வலியுடன் அவதிப்பட்டார். கேன்பராவுக்கு இப்போதுதான் வந்துள்ளோம். சிட்னிக்கு மீண்டும் திரும்பும்வரை அடுத்த ஐந்து, ஆறு நாள்களுக்கு அவரைப் பார்க்கப் போவதில்லை.

அடிலெய்ட் டெஸ்டுக்குள் அவர் மீண்டுவிடுவாரா என்கிற பதற்றம் என்னிடம் இல்லை. ஆனால் மிகவும் பொறுப்பான வீரரான வார்னர், உடற்தகுதியை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் நிச்சயம் ஈடுபடுவார். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். அவர் அணியில் இல்லாதது பெரிய இழப்பு தான். நாங்கள் ஒருநாள் தொடரை வென்றுள்ளோம். எனவே டெஸ்ட் அணிக்கு யாரைத் தேர்வு செய்யவேண்டும் என்பது குறித்து கவலைப்படப்போவதில்லை என்றார்.

Tags : Warner Adelaide Test
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT