செய்திகள்

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் மோசமாகப் பந்துவீசுகிறாரா?: ஆஸி. கேப்டன் பதில்

DIN

ஒருநாள் தொடரில் ஆஸி. வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் அதிக ரன்களைக் கொடுத்து தடுமாறி வருகிறார்.

இரு ஒருநாள் ஆட்டங்களிலும் 18 ஓவர்களில் 147 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் மட்டும் எடுத்துள்ளார். இந்திய அணியினர் இவருடைய பந்துவீச்சை சுலபமாக எதிர்கொள்கிறார்கள்.

மேலும் கடந்த 11 ஒருநாள் ஆட்டங்களில் 12 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்துள்ளார் ஸ்டார்க். எகானமி - 6.28.

ஆஸி. கேப்டனுக்கு இது கவலையளிக்கிறதா? ஸ்டார்க் பந்துவீச்சு பற்றி ஆரோன் ஃபிஞ்ச் கூறியதாவது:

ஸ்டார்க் பந்துவீச்சு ஓரளவு சரியாகத்தான் இருக்கிறது என நினைக்கிறேன். என்ன, மிகச்சிறந்த பந்துவீச்சை இந்தத் தொடரில் அவர் வெளிப்படுத்தவில்லை. மற்ற வீரர்களை விடவும் ஸ்டார்க்கிடம் அதிகப் பங்களிப்பை அனைவரும் எதிர்பார்க்கிறோம். கடந்த 8,9 வருடங்களாக அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். எனவே பந்தைச் சரியாக ஸ்விங் செய்து நன்கு பந்துவீசவே அவர் முயல்வார். பெரிய ஸ்கோரை விரட்டும் எதிரணிக்குப் பந்துவீசும்போதும் நல்ல வீரர்கள் எதிரணியில் இருக்கும்போதும் உங்கள் பந்துவீச்சை அடித்து ஆடவே பார்ப்பார்கள். எனவே வித்தியாசமாக ஏதாவது செய்ய முடியுமா என அவரிடம் பேசிப் பார்ப்பேன். எப்போது அவரைப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றியும். பதற்றப்படும் அளவுக்கு எதுவும் நடந்துவிடவில்லை என்றார். 

ஒருநாள் ஆட்டங்களில் தடுமாறி வந்தாலும் டெஸ்ட் ஆட்டங்களில் ஸ்டார்க் அபாரமாகப் பந்துவீசி வருகிறார். ஜனவரி 2019 முதல் விளையாடி 8 டெஸ்டுகளில் 45 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 34.8 பந்துகளுக்கு ஒரு விக்கெட் எடுத்து அசத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”கனவு காண்பது அண்ணாமலையின் உரிமை!”: கனிமொழி பேட்டி

பெங்களூரு குண்டு வெடிப்பு: தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

SCROLL FOR NEXT