செய்திகள்

ரோஹித் சர்மா, மாரியப்பன் தங்கவேலுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது: மத்திய அரசு அறிவிப்பு

21st Aug 2020 05:19 PM

ADVERTISEMENT

 

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சோ்ந்த உயரம் தாண்டுதல் வீரா் மாரியப்பன் தங்கவேலு உள்ளிட்ட ஐந்து பேருக்கு இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறையில் சிறந்து  விளங்குபவர்களுக்கு அர்ஜூனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. இந்த வருடம் இந்த விருதுகளைப் பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய ஐந்து பேருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : Rajiv Gandhi Khel Ratna Award
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT