செய்திகள்

துபை சென்று சேர்ந்தார் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன்! (விடியோ)

21st Aug 2020 03:02 PM

ADVERTISEMENT

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்காக 8 ஐபிஎல் அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் போட்டி தொடங்குவதால் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல ஆரம்பித்துள்ளன. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளின் வீரர்கள் இன்று துபைக்குப் புறப்படுகிறார்கள்.

சிஎஸ்கே அணி தொடக்க வீரர் ஷேன் வாட்சன், மற்ற வீரர்களுக்கு முன்பாக துபைக்குச் சென்றுவிட்டார். தனது விடுதி அறையிலிருந்து அவர் தகவல் தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

துபைக்கு வந்துள்ளேன். என்னுடைய விடுதியில் உள்ளேன். 7 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்வது இன்று முதல் தொடங்கியுள்ளது. என் அறையிலிருந்து அருமையான காட்சிகள் தெரிகின்றன. மீண்டும் ஐபிஎல் போட்டியில் விளையாட ஆர்வமாக உள்ளேன் என்றார்.

 

Tags : shane watson Dubai
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT