செய்திகள்

பராகுவே ஓபன்: பிரபல வீரர் வாவ்ரிங்காவுக்கு எதிரான காலிறுதிச் சுற்றில் இந்திய வீரர் தோல்வி!

21st Aug 2020 10:58 AM

ADVERTISEMENT

 

பராகுவே ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரபல வீரர் ஸ்டான் வாவ்ரிங்காவுக்கு எதிரான காலிறுதிச் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வியடைந்துள்ளார்.

பராகுவே காலிறுதிச் சுற்றில் உலகின் நெ. 17 வீரர் வாரிங்காவுடன் மோதிய சுமித் நாகல், 6-2, 0-6, 1-6 என்ற செட் கணக்கில் தோற்றுள்ளார். எனினும் முதல் செட்டை வாவ்ரிங்காவுக்கு எதிராக வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 

கடந்த வருட யு.எஸ். போட்டியின் போதும் முதல் சுற்றில் ஃபெடரருக்கு எதிராக மோதிய சுமித், முதல் சுற்றை வென்று ஆச்சர்யப்படுத்தினார். பிறகு 6-4, 1-6, 2-6, 4-6 என அந்த ஆட்டத்தில் தோற்றுப் போனார்.

ADVERTISEMENT

இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டி காலி அரங்கில் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை நடைபெறவுள்ளது. இப்போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது.

பிரபல வீரர்கள் விலகியுள்ளதால் இந்த வருட யு.எஸ். ஓபன் போட்டியின் முதல் சுற்றுக்கு சுமித் நாகல் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார். 22 வயது சுமித், தரவரிசையில் 127-வது இடத்தில் உள்ளார்.

Tags : Sumit Nagal Stan Wawrinka
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT