செய்திகள்

3-வது டெஸ்ட்: இங்கிலாந்து முதலில் பேட்டிங்!

21st Aug 2020 04:01 PM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என வென்றது இங்கிலாந்து அணி. அடுத்ததாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. 2-வது டெஸ்ட் டிரா ஆனது. 

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் 2010-க்குப் பிறகு டெஸ்ட் தொடரில் தோற்றதில்லை. கடந்த இரு இங்கிலாந்துச் சுற்றுப்பயணங்களிலும் ஆறு டெஸ்டுகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 3 டெஸ்டுகளில் வெற்றி பெற்று 3 டெஸ்டுகளில் தோல்வியடைந்துள்ளது. இதனால் கடைசி டெஸ்ட் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. அந்த அணியில் சாம் கரணுக்குப் பதிலாக ஆர்ச்சர் இடம்பெற்றுள்ளார். பாகிஸ்தான் அணியில் மாற்றமில்லை. 

Tags : England Southampton
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT