செய்திகள்

ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக துபைக்குப் புறப்பட்டது சிஎஸ்கே அணி! (படங்கள்)

21st Aug 2020 02:09 PM

ADVERTISEMENT

 

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக தோனி உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் கிங்ஸ் அணி வீரர்கள் துபைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்காக 8 ஐபிஎல் அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் போட்டி தொடங்குவதால் ஒவ்வொரு ஐபிஎல் அணியும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்ல ஆரம்பித்துள்ளன. சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளின் வீரர்கள் இன்று துபைக்குப் புறப்படுகிறார்கள்.

ADVERTISEMENT

தோனி, ரெய்னா, ஜடேஜா உள்ளிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று துபைக்குச் சென்றுள்ளார்கள். இரு வருடங்களுக்கு முன்பு ஐபிஎல் கோப்பையை சிஎஸ்கே அணி வென்றது. கடந்த முறை நூலிழையில் கோப்பையைத் தவறவிட்டது. எனவே, இந்தமுறை சிஎஸ்கே அணி கோப்பையை வெல்ல வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலுடன் உள்ளார்கள்.

Tags : CSK UAE
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT