செய்திகள்

ஐசிசி நடுவர் குழுவில் இணைந்தார் கேரள முன்னாள் வீரர்

11th Aug 2020 10:25 AM

ADVERTISEMENT

 

ஐசிசி சர்வதேச நடுவர் குழுவில் கேரள முன்னாள் வீரரான கே.என். அனந்த பத்மநாபன் இணைந்துள்ளார்.

2020-21-ம் ஆண்டுக்கான ஐசிசி பிரதான நடுவர் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த நிதின் மேனன் சமீபத்தில் சேர்க்கப்பட்டார். 36 வயது நிதின் மேனன், 3 டெஸ்டுகள், 24 ஒருநாள், 16 டி20 ஆட்டங்களில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். வெங்கட்ராகவன், சுந்தரம் ரவி ஆகியோருக்கு அடுத்து பிரதான நடுவர் குழுவில் இடம்பெற்ற இந்தியர் என்கிற பெருமையை நிதின் மேனன் அடைந்துள்ளார்.

இந்நிலையில் கேரள முன்னாள் வீரரான கே.என். அனந்த பத்மநாபன் ஐசிசி சர்வதேச நடுவர் குழுவில் இணைந்துள்ளார். ஐபிஎல், இந்திய உள்ளூர் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றிய அனுபவம் அனந்த பத்மநாபனுக்கு உண்டு. ஐசிசி சர்வதேச நடுவர் குழுவில் ஏற்கெனவே சம்சுதீன், அனில் செளத்ரி, விரேந்தர் சர்மா ஆகியோர் உள்ளார்கள். 

ADVERTISEMENT

கே.என். அனந்த பத்மநாபன், கேரள அணிக்காக 105 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT