செய்திகள்

ராமா் கோயில் பூமி பூஜை: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகிழ்ச்சி

6th Aug 2020 03:43 PM

ADVERTISEMENT

 

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி நகரில் பிரம்மாண்டமாக அமையவிருக்கும் ராமா் கோயிலுக்கான பூமி பூஜை கோலாகலமாக நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டினாா்.

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா, ராமா் கோயில் பூமி பூஜை குறித்து ட்விட்டரில் தெரிவித்ததாவது:

ADVERTISEMENT

கடவுள் ராமரின் மகத்துவம் அவருடைய பெயரில் இல்லை, குணாதிசயத்தில் உள்ளது. தீமைக்கு எதிரான போரில் வென்றதற்கான அடையாளம் அவர். உலகம் முழுக்க மகிழ்ச்சி அலை வீசுகிறது. இது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது என்று கூறியுள்ளார். 

பாகிஸ்தானுக்காக 61 டெஸ்டுகளில் விளையாடிய கனேரியா, 261 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். பாகிஸ்தான் அணிக்காக விளையாடிய 2-வது இந்து வீரர். இதற்கு முன்பு கனேரியாவின் மாமா அனில் தல்பாத், பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பராக விளையாடியுள்ளார். நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்பதால் பாகிஸ்தான் அணியில் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டேன் என கனேரியா சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். 2012-ல் ஸ்பாட் பிக்ஸிங் புகார் காரணமாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. இதையடுத்து 2013-ல் பாகிஸ்தானும் கனேரியாவுக்குத் தடை விதித்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT