செய்திகள்

உலகக் கோப்பைகளை வெல்வதே இலக்கு: ரோஹித் சர்மா

26th Apr 2020 10:25 PM

ADVERTISEMENT


உலகக் கோப்பைகளை வெல்வதே தனது இலக்கு என இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள் சமூக ஊடகங்களில் காணொலிக் காட்சி மூலம் உரையாடி வருகின்றனர். இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில்  ரோஹித் சர்மா தெரிவித்திருப்பதாக வெளியிடப்பட்ட பதிவில்:

"ஒவ்வொரு முறை களமிறங்கும்போதும் வெற்றி பெற வேண்டும் என்றுதான் தோன்றும். ஆனால், உலகக் கோப்பை எல்லாவற்றைக் காட்டிலும் சிறந்தது. எனக்கு உலகக் கோப்பைகளை வெல்ல வேண்டும்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ரோஹித் சர்மா இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்குடன் காணொலிக் காட்சி மூலம் உரையாடினார். அப்போது அவர் உலகக் கோப்பை பற்றி பேசுகையில், "3 உலகக் கோப்பை தொடர்கள் வரவுள்ளது. இந்த மூன்றில், குறைந்தபட்சம் இரண்டு உலகக் கோப்பைகளையாவது வெல்ல வேண்டும். அதுதான் என் இலக்கு" என்றார்.

ADVERTISEMENT

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. அதன்பிறகு, 2023-இல் 50 ஓவர் உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இதனிடையே வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி ரோஹித் சர்மா தனது 33-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

Tags : Rohit Sharma
ADVERTISEMENT
ADVERTISEMENT