செய்திகள்

தடுப்பூசிக்கு நான் எதிரானவன்: கரோனா அச்சுறுத்தல் குறித்து உலகின் நெ.1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச்

20th Apr 2020 12:13 PM

ADVERTISEMENT

 

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அது குறித்து யோசித்து முடிவெடுப்பேன் என உலகின் நெ.1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச் கூறியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 17,600 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2020 விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வருடம் எவ்வித டென்னிஸ் போட்டிகளும் நடக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் உலகின் நெ.1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச் ஒரு பேட்டியில் கூறியதாவது:

ADVERTISEMENT

பொதுவாக தடுப்பூசிகளுக்கு நான் எதிரானவன். தடுப்பூசி செலுத்திக்கொண்டால்தான் பயணம் செய்ய முடியும் எனக் கட்டாயப்படுத்துவதை விரும்பாதவன். ஆனால் இது கட்டாயமாக்கப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அப்போது இதுகுறித்து யோசித்து முடிவெடுப்பேன். தடுப்பூசி பற்றி எனக்கென்று சில கருத்துகள் உள்ளன. அக்கருத்துகள் மாறுமா என்பது எனக்குத் தெரியாது.

ஜூலை, ஆகஸ்ட், அல்லது செப்டம்பரில் டென்னிஸ் ஆட்டங்கள் தொடங்கினால், அதற்குச் சாத்தியமில்லை என்றாலும் கூட, அப்போதும் தடுப்பூசி தேவைப்படும். தற்போதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை என்று கூறியுள்ளார்.

Tags : Djokovic
ADVERTISEMENT
ADVERTISEMENT