செய்திகள்

கரோனா தடுப்புப் பணிகளுக்காக சுனில் கவாஸ்கர் ரூ. 59 லட்சம் நிதியுதவி!

7th Apr 2020 05:12 PM

ADVERTISEMENT

 

கரோனா தடுப்புப் பணிகளுக்காக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரூ. 59 லட்சம் நிதியுதவி செய்துள்ளார்.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 75,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 4,800 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ரூ. 59 லட்சம் நிதியுதவி செய்துள்ளார். ரூ. 35 லட்சத்தை பிரதமர் பொது நிவாரண நிதிக்கும் ரூ. 24 லட்சத்தை மஹாராஷ்டிர நிவாரண நிதிக்கும் வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT

Tags : Gavaskar
ADVERTISEMENT
ADVERTISEMENT