செய்திகள்

பிரதமர் சொன்னபடி ஒளியேற்றுங்கள்: சச்சின் டெண்டுல்கர்

5th Apr 2020 06:27 PM

ADVERTISEMENT


தூய்மைப் பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பிரதமர் மோடி ஒளியேற்றச் சொன்னதை மக்கள் பின்பற்ற வேண்டும் என சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சுட்டுரைப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

"9 மணி 9 நிமிடங்களுக்கு இன்னும் 4 மணி நேரங்களே உள்ளன. லட்சக்கணக்கான தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புக்கு மரியாதை செலுத்தும் வகையில் நான் ஒளியேற்றுகிறேன். அவர்கள் நமது சுற்றுபுறத்தைத் தொடர்ந்து சுத்தப்படுத்தி வருகின்றனர். நம்மைப் பாதுகாக்க அவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைக்கின்றனர். உங்களுக்கான காரணத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். ஆனால் ஒன்றுபடுவோம்." என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 3-ஆம் தேதி சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி, கங்குலி, சேவாக் உள்ளிட்ட 49 விளையாட்டுப் பிரபலங்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஒரு மணி நேரம் கலந்துரையாடினார் பிரதமர் மோடி. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் விஸ்வநாதன் ஆனந்த், பி.வி. சிந்து, அபிஷேக் வர்மா, அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்ட இதர விளையாட்டுப் பிரபலங்களுடனும் உரையாடிய மோடி, கரோனா பாதிப்பிலிருந்து காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு பிரபலங்களிடம் வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT