செய்திகள்

ஒலிம்பிக்ஸில் தங்கம் வாங்காமல் ஓயமாட்டேன்: மேரி கோம்

1st Apr 2020 12:33 PM

ADVERTISEMENT

 

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லாமல் ஓயமாட்டேன் எனப் பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் கூறியுள்ளார்.

2012 லண்டன் ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற மேரி கோம் ஒரு பேட்டியில் கூறியதாவது:

ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதில் தான் என் கவனம் உள்ளது. இந்த வயதில் இதற்காகக் கடுமையாக நான் முயல்கிறேன். ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதற்காகவே நான் போராட வேண்டியுள்ளது. உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஒலிம்பிக்ஸிலும் நான் சிறப்பாக விளையாடுவதற்கு எவ்வித மந்திரமும் கிடையாது. ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்லும் வரை நான் ஓயமாட்டேன் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேரி கோம் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளாா். கடந்த வருடம், உலக மகளிா் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் 8-வது பதக்கம் வென்ற ஓரே வீராங்கனை என்ற புதிய உலக சாதனையைப் படைத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT