செய்திகள்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்: அமித் பங்கால் சாதனை

22nd Sep 2019 02:06 AM

ADVERTISEMENT

ரஷியாவில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
உலக குத்துச்சண்டை இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த முதல் இந்தியரான அமித் பங்கால், வெள்ளி வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிதீன் சொய்ரோவுடன் 52 கிலோ எடைப் பிரிவில் மோதிய அவர், 0-5 என்ற புள்ளிக் கணக்கில் தோற்றார். தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், இந்தியாவுக்காக உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தினார் அமித் பங்கால்.
முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் கஜகஸ்தான் வீரர் சாகென் பிபோஸினோவை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் அமித் பங்கால்.
வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள அமித் பங்காலுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சாதனை புரிந்த அமித் பங்கால் கூறுகையில், "ஒலிம்பிக் போட்டியே எனது அடுத்த இலக்கு' என்றார். இதற்கு முன்பு, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரே ஆண்டில் 2 பதக்கங்களை இந்தியா வென்றதில்லை.
இந்த ஆண்டு இதே போட்டியில் இந்திய வீரர் மணீஷ் கௌஷிக் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியர்கள் பின்வருமாறு: விஜேந்தர் சிங் (2009), விகாஸ் கிருஷ்ணன் (2011), சிவா தபா (2015), கௌரவ் பிதூரி (2017).

ADVERTISEMENT
ADVERTISEMENT