செய்திகள்

செப். 27 முதல் ஐஎஸ்எல் டிக்கெட் விற்பனை: சென்னையின் எஃப்சி அறிவிப்பு

22nd Sep 2019 02:00 AM

ADVERTISEMENT

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டிக்கு சீசன் டிக்கெட்டுகள் விற்பனை இம்மாதம் 27ஆம் தேதி முதல் தொடங்கும் என்று சென்னையின் எஃப்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னையின் எஃப்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
புக்மைஷோ செயலி அல்லது அந்த இணையதளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். ஒரே ஒரு அட்டை வழங்கப்படும். அதன்மூலம், சென்னையில் நடைபெறும் 9 ஆட்டங்களை காண முடியும்.
இந்த ஆண்டு (2019-2020) சீசன் டிக்கெட் கட்டணம் ரூ.2,700, ரூ.3,150-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT