செய்திகள்

ஐஎஸ்எல்: ஹைதராபாத் அணியின் புதிய இலச்சினை

22nd Sep 2019 01:59 AM

ADVERTISEMENT

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி அணி புதிய இலச்சினையை (லோகோ) அறிமுகம் செய்தது.
ஹைதராபாத் நகரில் சனிக்கிழமை புதிய இலச்சினையை வெளியிடப்பட்டது. ஹைதராபாத் நகரின் அடையாளங்களில் ஒன்றான சார்மினாரையும், கோஹினூர் வைரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் இந்த இலச்சினை உள்ளது.
"1910ஆம் ஆண்டிலிருந்து ஹைதராபாத் நகரம் விளையாட்டுத் துறையில் மிளிர்ந்து வருகிறது. 1920, 1950 காலகட்டங்களில் கால்பந்து விளையாட்டிலும் ஹைதராபாத் ஆதிக்கம் செலுத்தியது' என்று ஹைதராபாத் எஃப்சி அணியின் இணை நிறுவனர் வருண் திரிபுனேனி தெரிவித்தார். 6ஆவது ஐஎஸ்எல் தொடர் அக்டோபர் 20ஆம் தேதி தொடங்குகிறது. 


 

ADVERTISEMENT
ADVERTISEMENT