செய்திகள்

துளிகள்...

22nd Sep 2019 01:55 AM

ADVERTISEMENT

 

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி மீண்டும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது பதவிக் காலம் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை மட்டுமே இருக்கும் என்று தெரிகிறது.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் (டிஎன்சிஏ) நிர்வாகக் குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அப்போது, நிர்வாகிகள் தேர்தலை நடத்துவதற்கான தேதி முடிவு செய்யப்படவுள்ளது. பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசனின் மகள் ரூபா குருநாத், டிஎன்சிஏ தலைவர் பதவிக்கு போட்டியிடப்போகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம், பார்மெர் நகரில் சனிக்கிழமை கார் பந்தயம் நடந்து கொண்டிருந்தபோது, தடுப்புகளை அகற்றிவிட்டு அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது கார் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இந்தக் காரை அர்ஜூனா விருது வென்ற கௌரவ் கில் ஓட்டிவந்தார். விபத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT