ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் உத்திகள்: விடியோ வழியாக தனது அலசலை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்!

இந்நிலையில் ஸ்மித்தை வீழ்த்த இங்கிலாந்து அணி திணறியது ஏன் என்கிற கோணத்தில் ஸ்மித்தின் பேட்டிங் உத்தியை மிகவும் நுட்பமாகக் கவனித்து... 
ஸ்டீவ் ஸ்மித்தின் பேட்டிங் உத்திகள்: விடியோ வழியாக தனது அலசலை வெளியிட்ட சச்சின் டெண்டுல்கர்!

சமீபத்தில் நடந்த முடிந்த ஆஷஸ் தொடர் 2-2 என யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5-ஆவது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-2 என தொடரை சமன் செய்தது இங்கிலாந்து.

இந்த ஆஷஸ் தொடரில் 4 டெஸ்டுகளில் பங்கேற்ற ஸ்மித், 774 ரன்கள் எடுத்து கவாஸ்கரின் சாதனையைச் சமன் செய்தார். கவாஸ்கர் தனது முதல் தொடரிலேயே பலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 774 ரன்கள் குவித்தார். ஒருவருடத் தடைக்குப் பிறகு டெஸ்டுகளில் விளையாடி வரும் ஸ்மித், ஆஷஸ் தொடரில் எடுத்த ஸ்கோர்கள் - 144, 142, 92, 211, 82, 80 & 23. ஏழு இன்னிங்ஸில் 774 ரன்கள்.

இந்நிலையில் ஸ்மித்தை வீழ்த்த இங்கிலாந்து அணி திணறியது ஏன் என்கிற கோணத்தில் ஸ்மித்தின் பேட்டிங் உத்தியை மிகவும் நுட்பமாகக் கவனித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர். அதில் அவர் கூறியதாவது:

முதல் டெஸ்டில், ஸ்லிப் பகுதியில் ஸ்மித்தை ஆட்டமிழக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் முயன்றார்கள். இதற்காக ஸ்டம்ப்பின் இடது பக்கமாக நகர்ந்து, தனது லெக் ஸ்டம்பு பந்துவீச்சாளர்களுக்குத் தெரியும்படி விளையாடினார் ஸ்மித். ஆஃப் சைட் பக்கமாக வீசிய பந்தை அவர் தொடவில்லை. மிகவும் தேர்ந்தெடுத்து ஷாட்களைப் பயன்படுத்தினார்.

2-வது டெஸ்டில், லெக் ஸ்லிப்பை நிற்க வைத்து ஆர்ச்சரை பவுன்சர் வீசச் செய்தது இங்கிலாந்து. இது ஸ்மித்தைத் தொந்தரவு செய்தது. தனது பேட்டிங் நுட்பத்தால் பவுன்சர் பந்தை அடித்து ஆடாமல் தடுத்தாட முயன்றார் ஸ்மித். அதனால் அவரது நிலை மாறியது. அதனால் தான் அவர் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஆட்ட உத்தியை மாற்றிக்கொண்டார் என்று தனது விடியோவில் ஸ்மித் ஆடிய விதம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com