கேள்விக்கே இடமில்லை, விராட் கோலி தான் கேப்டன்: ஆர்சிபி முடிவு!

2020 ஐபிஎல் போட்டியிலும் விராட் கோலியே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் போட்டியிலும் கேப்டனாக நீடிப்பார் என ஆர்சிபி அணியின் இயக்குநர் மைக் ஹெஸ்ஸன் கூறியுள்ளார்...
கேள்விக்கே இடமில்லை, விராட் கோலி தான் கேப்டன்: ஆர்சிபி முடிவு!

2020 ஐபிஎல் போட்டியிலும் விராட் கோலியே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐபிஎல் போட்டியிலும் கேப்டனாக நீடிப்பார் என ஆர்சிபி அணியின் இயக்குநர் மைக் ஹெஸ்ஸன் கூறியுள்ளார். 

ஐந்து முறை பிளே ஆஃப்புக்குத் தகுதி பெற்றும் மூன்று முறை இறுதிச்சுற்றில் விளையாடியும் பிரபல வீரர்களைக் கொண்டிருந்தும் பெங்களூர் அணியால் ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை இதுவரை வெல்லமுடியவில்லை. கடந்த வருடம் 6-ம் இடம், 2017-லிலும் இந்த வருடமும் கடைசி இடம் எனக் கடந்த மூன்று வருடங்களாக மிக மோசமாகவே விளையாடி வருகிறது. இதையடுத்து, அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். அதற்குப் பதிலாக தலைமைப் பயிற்சியாளராக சைமன் கடிச்சும் அணி இயக்குநராக மைக் ஹெஸ்ஸனும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்பு சைமன் கடிச், கொல்கத்தா அணியின் உதவிப் பயிற்சியாளராகவும் ஹெஸ்ஸன், பஞ்சாப் அணியின் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்கள்.

இநிந்லையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், மைக் ஹெஸ்ஸன் கூறியதாவது: கடந்த சில வாரங்களாக நடைபெற்ற கூட்டங்களின் அடிப்படையில் சொல்கிறேன், விராட் கோலியின் தலைமைப்பண்பு குறித்து எங்களுக்கு எவ்விதச் சந்தேகமும் இல்லை. கேள்விக்கே இடமில்லை, அவர் தான் ஆர்சிபி அணியின் கேப்டன். எங்கள் அனுபவத்தின் மூலம் கிடைக்கும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்வதில் அவருக்கும் எவ்விதத் தடையும் இல்லை. விராட் கோலியே எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார் என எண்ணவில்லை. தன்னுடைய முந்தைய அனுபவங்களின் மூலம் தவறுகளைத் திருத்திக்கொள்வார். விஜய் ஹசாரே, முஸ்டாக் அலி கோப்பை ஆகிய போட்டிகளின் மூலம் எங்கள் அணிக்கான புதிய வீரர்களைத் தேர்வு செய்வோம் என்று கூறியுள்ளார். 

தலைமைப் பயிற்சியாளர் சைமன் கடிச்சும் விராட் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார். 

ஆர்சிபி கேப்டனாக விராட் கோலி

ஆட்டங்கள் - 110
வெற்றி - 49 
தோல்வி - 55
வெற்றி சதவிகிதம் - 47.16

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com