மல்யுத்தம்: டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்கு இந்தியாவின் ரவி குமார், பஜ்ரங் புனியா தகுதி!

உலக மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்தியாவின் ரவி குமார், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
மல்யுத்தம்: டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்கு இந்தியாவின் ரவி குமார், பஜ்ரங் புனியா தகுதி!

உலக மல்யுத்த போட்டியில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்தியாவின் ரவி குமார், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.

கஜகஸ்தானின் நுர்-சுல்தான் நகரில் உலக மல்யுத்த போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி 2020 ஒலிம்பிக் போட்டி தகுதிச் சுற்றாகவும் உள்ளது.

இன்று நடைபெற்ற  ஆடவர் 65 கிலோ பிரிவு காலிறுதிச்சுற்றில் நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா வட கொரியாவின் ஜாங் சொனை எதிர்கொண்டார். ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய உலகின் நெ.1 வீரர் பஜ்ரங் புனியா 8-1 என்கிற புள்ளிக்கணக்கில் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றார். இதன்மூலம் 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு அவர் தகுதி பெற்றார்.

அரையிறுதிச் சுற்றில் கஸகஸ்தானைச் சேர்ந்த தவுலத் நியாஸ்பெகோவை எதிர்கொண்டார் பஜ்ரங் புனியா. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 9-9 என இருவரும் சமமாகப் புள்ளிகள் பெற்றாலும் விதிகளின் அடிப்படையில் தவுலத் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றார். இதனால் பஜ்ரங் புனியா ஏமாற்றமடைய நேர்ந்தது.  

ஆடவர் 57 கிலோ பிரிவில் இந்தியாவின் ரவி குமார் தாஹியாவும் ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் உலக சாம்பியன் யுகி டகாஹஸியை 6-1 என்கிற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார் ரவி குமார். ஒலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற அவர், அரையிறுதிச் சுற்றில் ரஷ்யாவின் உகேவை எதிர்கொண்டார். அதில், 4-6 எனத் தோற்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்தார்.  

நேற்று நடைபெற்ற போட்டியில், இந்திய நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகட் வெண்கலம் வென்று, 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com