ஆசிய டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி ஆடவர் பிரிவில் இந்திய அணி 3-0 என்ற கேம் கணக்கில் சிங்கப்பூரை வென்றது.
இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள்.
இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள்.

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி ஆடவர் பிரிவில் இந்திய அணி 3-0 என்ற கேம் கணக்கில் சிங்கப்பூரை வென்றது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த ஜப்பானிடம் 1-3 என்ற கேம் கணக்கில் தோல்வியுற்றது இந்தியா.
பின்னர் 5-8 ஆம் இடங்களுக்கு நடைபெற்ற ஆட்டத்தில் சிங்கப்பூரை வீழ்த்தியது. மூத்த வீரர் சரத் கமல் 7-11, 13-11, 9-11, 11-9, 11-3 என போராடி பேங் யிவை வென்றார். மற்றொரு ஆட்டத்தில் சத்யன் 11-5, 11-5, 13-11 என எளிதில் போ ஷவோவை வீழ்த்தினார்.
அந்தோணி அமல்ராஜும் 7-1, 11-7, 15-13, 11-9 என வென்றார். இந்த வெற்றி மூலம் இந்தியா 5-ஆவது இடத்தைக் கைப்பற்றியது. 
இதனால் 2021 ஆசிய சாம்பியன் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
ஜப்பானுடன் நடந்த காலிறுதியில் சத்யன் தனது ஆட்டத்தில் வென்ற நிலையில், சரத் கமல், ஹர்மித் தேசாய் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
மகளிர் பிரிவில் இந்திய அணி 9-ஆவது இடத்தையே பெற முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com