செய்திகள்

தென் ஆப்பிரிக்க  ஏ அணிக்கு எதிராக ஷுப்மன் கில், கருண் நாயர் அபார ஆட்டம்!

17th Sep 2019 06:00 PM | எழில்

ADVERTISEMENT

 

இந்தியா - தென் ஆப்பிரிக்க ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது டெஸ்ட், மைசூரில் இன்று தொடங்கியுள்ளது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க ஏ அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அபிமன்யூ ஈஸ்வரன் 5 ரன்களிலும் பஞ்சால் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில்லும் கருண் நாயரும் அபாரமாக விளையாடினார்கள். ஷுப்மன் கில் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். 

முதல் நாளின் முடிவில் இந்திய ஏ அணி, 74 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. கருண் நாயர் 78, சஹா 36 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT