செய்திகள்

புதிய சுழற்பந்து வீச்சாளர்களை கண்டறியும் பணியில் இந்திய அணி நிர்வாகம்

17th Sep 2019 01:56 AM

ADVERTISEMENT

குல்தீப், சாஹல் ஆகியோருக்கு மாற்றாக புதிய சுழற்பந்து வீச்சாளர்களை கண்டறியும் பணியில் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக ஒருநாள் மற்றும் டி20 ஆட்டங்களில் குல்தீப், சாஹல் ஆகியோர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சில் தவிர்க்க முடியாத அங்கமாக உள்ளனர். எனினும் மே.இ.தீவுகள், தற்போதைய தென்னாப்பிரிக்க டி20 தொடர்களில் இருவருக்கும் வாய்ப்பு தரப்படவில்லை.
அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹார் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
குல்தீப், சாஹல் ஆகியோர் சுழற்பந்து வீச்சில் சிறந்து விளங்கினாலும், அணியின் ஸ்கோரை உயர்த்தும் வகையில் பேட்டிங் செய்வதில்லை என்ற குறைபாடு உள்ளது. டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், ஸ்கோர் 200-ஐ எட்டுமாறு ஆட வேண்டும் என்பது கேப்டன் கோலியின் திட்டமாக உள்ளது. இதற்காக பேட்டிங்கிலும் சிறப்பாக உள்ள பந்துவீச்சாளர்களை கண்டறியும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சுந்தர், ராகுல் சஹார் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT