செய்திகள்

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் மோடி பாராட்டு

17th Sep 2019 01:58 AM

ADVERTISEMENT

உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன் பட்டத்தை 22-ஆவது முறையாக கைப்பற்றிய இந்திய வீரர் பங்கஜ் அத்வானிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மியான்மரின் மண்டாலே நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உலகப் போட்டியில் பங்கஜ் அத்வானி 6-2 என்ற புள்ளிக்கணக்கில் உள்ளூர் வீரர் நே தவே ஓவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது: உங்களுக்கு எனது வாழ்த்துகள், நாடே உங்கள் சாதனையால் பெருமைபடுகிறது. மேலும் எதிர்காலத்தில் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்துகள் என மோடி பாராட்டியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT