செய்திகள்

உலக ஆடவர் குத்துச்சண்டை: சஞ்சித் வெற்றி

17th Sep 2019 01:54 AM

ADVERTISEMENT

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன் போட்டியில் இந்திய வீரர் சஞ்சித் வெற்றி பெற்றார். அதே நேரம் துரியோதன் நேகி தோல்வியைத் தழுவினார்.
ரஷியாவின் எகடெரின்பர்க் நகரில் நடைபெறும் இப்போட்டியில் 81-91 கிலோ பிரிவில் இந்தியாவின் இளம் வீரர் சஞ்சித் 4-1 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்காட்லாந்தின் ஸ்காட்பாரஸ்டை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.
69 கிலோ பிரிவில் இந்தியாவின் துரியோதன் நேகி 1-4 என்ற புள்ளிக் கணக்கில் ஜோர்டான் வீரர் ஸெயதிடம் வீழ்ந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT