செய்திகள்

ஆசிய டேபிள் டென்னிஸ்: காலிறுதியில் இந்திய ஆடவர் அணி

17th Sep 2019 01:54 AM

ADVERTISEMENT

ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு இந்திய ஆடவர் அணியின் முன்னேறி உள்ளனர்.
இந்தோனேஷியாவின் யோக்யகர்தா நகரில் ஐடிடிஎப் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. 
இந்திய ஆடவர் அணி ஏற்கெனவே குவைத், இலங்கை அணிகளை 3-0 என்ற கேம் கணக்கில் வீழ்த்தினர். இதன் தொடர்ச்சியாக 
நாக் அவுட் சுற்றில் முதல் ஆட்டத்தில் சவுதி அரேபியாவை 3-1 எனவும், தாய்லாந்துடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆட்டத்திலும் 3-0 என்ற கேம் கணக்கில் அபார வெற்றி பெற்றனர். 
இதன் மூலம் காலிறுதிச் சுற்றில் நுழைந்தனர். பிரதான சுற்றில் 8 அணிகள் மோதுகின்றன.
சரத் கமல் 3-2 என தாய்லாந்தின் பாடஸக்கையும், சத்யன் ஞானசேகரன் 3-1 என சுப்னட்டையும், வென்றனர். மூன்றாவது ஆட்டத்தில் ஹர்மித் தேசாய் 3-2 என யனாபோங்கை வீழ்த்தினார். இதன் மூலம் 3-0 என இந்தியா வெற்றி பெற்றது.
மகளிர் அணி லெபனான், ஜோர்டானை 3-0 என வீழ்த்தியது. உஸ்பெகிஸ்தானை 3-0 என வென்ற நிலையில், தாய்லாந்திடம் 0-3 என தோல்வியடைந்தது. அடுத்து மலேசியாவுடன் மோதுகிறது இந்திய மகளிர் அணி.

ADVERTISEMENT
ADVERTISEMENT