செய்திகள்

பத்ம விருதுகள்: மேரி கோம், சிந்து, வினேஷ் போகட் பெயர்கள் பரிந்துரை

13th Sep 2019 12:47 AM

ADVERTISEMENT


கெளரவமிக்க பத்ம விருதுகளுக்கு மேரி கோம், பி.வி.சிந்து, வினேஷ் போகட் உள்ளிட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
உலக குத்துச்சண்டை சாம்பியன் மேரி கோம் பெயர் நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷனுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 
பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளை மேரி கோம் ஏற்கெனவே பெற்றுள்ளார்.  மேலும் அர்ஜுனா விருதையும் அவர் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.வி.சிந்து: அண்மையில் பாட்மிண்டன் உலக சாம்பியனான பி.வி.சிந்துவின் பெயர் பத்ம பூஷண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  பத்மஸ்ரீ விருதுக்கு வில்வித்தை வீரர் தருண்தீப் ராய், ஹாக்கி ஒலிம்பிக் வீரர் எம்.பி.கணேஷ், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட், டேபிள் டென்னிஸ் மனிகா பத்ரா, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கெளர், ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், முன்னாள் துப்பாக்கி சுடும் வீராங்கனை சுமா ஷிருர், மலையேற்ற இரட்டையர் டஷி, நுங்ஷி மாலிக் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பி.வி.சிந்து ஏற்கெனவே பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார். 
வில்வித்தை ரெக்கர்வ் பிரிவில் உலகப் போட்டியில் வெள்ளி வென்ற ராய், ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.  எம்.பி.கணேஷ், ராய் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT