புதன்கிழமை 18 செப்டம்பர் 2019

பத்ம விருதுகளுக்கு 9 விளையாட்டு வீராங்கனைகளின் பெயர்கள் பரிந்துரை!

By எழில்| DIN | Published: 12th September 2019 03:43 PM

 

9 வீராங்கனைகளின் பெயர்களை விளையாட்டு அமைச்சகம் பத்ம விருதுகளுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

மத்திய அமைச்சகங்கள், துறைகள், மாநில அரசுகள், பாரத ரத்னா மற்றும் பத்ம விபூஷண் விருது பெற்றவர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பத்ம விருதுகளுக்கு தகுதியான நபர்களை பரிந்துரைகளை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணிகள், வர்த்தகம், தொழில்துறை போன்றவற்றில் சாதனை புரிந்தவர்களுக்காக பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இனம், ஜாதி, பணி, பாலினம் ஆகிய வேறுபாடுகளின்றி இந்த விருதுகளுக்கான சாதனையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 
பிரதமர் தலைமையிலான பத்ம விருதுகள் தேர்வுக் குழு, விருதுக்கு தகுதியுடைய நபர்களை தேர்வு செய்கிறது.

இந்நிலையில் 9 வீராங்கனைகளின் பெயர்களை விளையாட்டு அமைச்சகம் பத்ம விருதுகளுக்குப் பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. வினேஷ் போகத் (மல்யுத்தம்), ஹர்மன்ப்ரீத் கெளர் (கிரிக்கெட்), ராணி ராம்பால் (ஹாக்கி), சுமா ஷிருர் (துப்பாக்கிச் சுடுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), இரட்டையர்கள் தஷி & நுங்ஷி மாலிக் (மலையேற்றம்) ஆகிய 7 வீராங்கனைகளும் பத்மஸ்ரீ விருதுகளுக்கும் பிரபல பாட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து பத்ம பூஷன் விருதுக்கும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பத்ம விபூஷன் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள். 

பத்ம விபூஷன் விருது இதற்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் (2007), சச்சின் டெண்டுல்கர் (2008), மறைந்த மலையேற்ற வீரர் சர் எட்மண்ட் ஹிலாரி என மூன்று வீரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்முறையாக வீராங்கனை ஒருவரின் பெயர் பத்ம விபூஷன் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேரி கோம் 2006-ல் பத்மஸ்ரீ விருதும் 2013-ல் பத்ம பூஷன் விருதும் பெற்றுள்ளார். 

2020, ஜனவரி 25 அன்று பத்ம விருதுகளுக்குத் தேர்வானவர்களின் பட்டியல் அறிவிக்கப்படும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Sports ministry Padmas MC Mary Kom Padma Vibhushan PV Sindhu Padma Bhushan Padma Shri awards

More from the section

தென்னாப்பிரிக்கா-இந்தியா இன்று 2-ஆவது டி20: வாய்ப்பை தக்க வைப்பாரா ரிஷப் பந்த்?
கேப்டன் பதவி எனது பேட்டிங்கை பாதிக்குமா எனத் தெரியவில்லை: குயிண்டன் டி காக்
உலக ஆடவர் குத்துச்சண்டை: காலிறுதியில் அமித், மணிஷ், சஞ்சித்
ஆசிய டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்
உலக மல்யுத்தம்: வினேஷ் போகட் தோல்வி