புதன்கிழமை 18 செப்டம்பர் 2019

இந்திய ஏ அணி வெற்றி: ஆட்ட நாயகனான ஆல்ரவுண்டர்!

By எழில்| DIN | Published: 12th September 2019 12:58 PM

 

தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தை இந்திய ஏ அணி வென்றுள்ளது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி, 164 ரன்களுக்குச் சுருண்டது. ஷர்துல் தாக்குரும் கே. கெளதமும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 87.5 ஓவர்களில் 303 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷுப்மன் கில் 90 ரன்களும் ஆல்ரவுண்டர் ஜலஜ் சக்‌ஷேனா 61 ரன்களும் எடுத்தார்கள். தெ.ஆ. ஏ தரப்பில் என்ஜிடி, டேன் பீடிட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தென் ஆப்பிரிக்க  ஏ அணி, 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறி, 58.5 ஓவர்களில் 186 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய ஏ தரப்பில் நதீம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்பிறகு இந்திய ஏ அணி வெற்றி பெற 48 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதை இந்திய ஏ அணி 9.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 49 ரன்கள் எடுத்து வென்றது. ஆட்ட நாயகனாக ஜலஜ் சக்‌ஷேனா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : 1st unofficial Test South Africa A South Africa A tour of India Thiruvananthapuram

More from the section

தென்னாப்பிரிக்கா-இந்தியா இன்று 2-ஆவது டி20: வாய்ப்பை தக்க வைப்பாரா ரிஷப் பந்த்?
கேப்டன் பதவி எனது பேட்டிங்கை பாதிக்குமா எனத் தெரியவில்லை: குயிண்டன் டி காக்
உலக ஆடவர் குத்துச்சண்டை: காலிறுதியில் அமித், மணிஷ், சஞ்சித்
ஆசிய டேபிள் டென்னிஸ்: இந்தியாவுக்கு 5-ஆவது இடம்
உலக மல்யுத்தம்: வினேஷ் போகட் தோல்வி